‘லால் சலாம்‘ படத்தில் கமிட் ஆன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ‘ஜெயிலர்‘ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து அவர் அடுத்ததாக தனது மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‘லால் சலாம்‘ படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.

இந்நிலையில் ‘லால் சலாம்‘ படத்தில் ரஜினிகாந்த் ஒரு முஸ்லிம் வேடத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் நடிப்பதற்கு 7 நாட்கள் கால்சீட் கொடுத்திருக்கிறார். மேலும் இப்படத்தில் நடிப்பதற்கு ரஜினிகாந்த்க்கு இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா 25 கோடி சம்பளம் பேசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்