லஷ்கர்- இ-தொய்பா அமைப்பினர் 3 பேர் சுட்டு கொலை – ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு

லஷ்கர்- இ-தொய்பா அமைப்பை சேர்ந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலைஜம்மு-காஷ்மீரில் 3 பயங்கரவாதிகளை இந்திய ராணுவத்தினர், அதிரடியாக சுட்டு கொன்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 9ம் தேதி சீனப்படையினருக்கும், இந்திய படையினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக இருநாட்டுக்கு இடையே போர் ஏற்படும் என்ற பேச்சு நிலவி வருகிறது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி, பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் அடங்குவதற்குள், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் இந்திய பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில், 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். (டிச.20) அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தில், கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என ஜம்மு-காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

காஷ்மீர் பகுதியில் உள்ள ஷோபியான் மாவட்டம் முன்ஜ் மார்க் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது. அங்கு இன்னும் சண்டைக்கு முடிவு வரவில்லை என  கூறப்பபடுகிறது. பயங்கரவாதிகளிடம் இருந்து ஒரு ஏகே 47 ரக துப்பாக்கி, 2 கைத் துப்பாக்கிகள் கைப்பற்றியதாக காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்