லஞ்ச புகாரில் ஐபிஎஸ் அதிகாரி சஸ்பெண்ட் – மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி

சிறையில் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரில், மூத்த ஐபிஎஸ் அதிகாரி சந்தீப் கோயலை, மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக ‘சஸ்பெண்ட்’ செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு அதிமுக சின்னம் பெற்று தருவதற்கு, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் என்பது உள்பட பல்வேறு செயல்களில் ஈடுபட்ட அரசியல் இடைதரகர் சுகேஷ் சந்திரசேகர், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது பல மோசடி வழக்குகள் உள்ளன.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர், தனது பாதுகாப்புக்காகவும், சிறையில் சொகுசு வசதிகளை அனுபவிப்பதற்காகவும், சிறை ஐஜியாக இருந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி சந்தீப் கோயலுக்கு, ரூ.12 கோடி லஞ்சமாக கொடுத்ததாக கூறினார். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம், ஐபிஎஸ் அதிகாரி சந்தீப் கோயலை, திகார் சிறையில் இருந்து புதுடெல்லி போலீஸ் தலைமையகத்துக்கு கடந்த மாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், லஞ்சம் பெற்ற புகாரை விசாரித்த அதிகாரிகள், அதன் அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைத்தது. இதைதொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சகம், ஐபிஎஸ் அதிகாரி சந்தீப் கோயர், பணியில் அலட்சியமாக இருந்ததாக கூறி, அவரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்