ராமராஜனுடன் ஜோடியாகும் நடிகை மீனா

நடிகர் ராமராஜன் எண்பது காலகட்டத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தார். இவர் நடித்த ‘கரகாட்டகாரன்‘ படம் இவருக்கு மாபெரும் வரவேற்பை கொடுத்தது.

மேலும் கிராமத்து கதைகளில் அதிகமாக நடித்து மக்களின் மனதை கவர்ந்த கிராமத்து நாயகனாக வலம் வந்தார். அதன்பின் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் இறங்கினார்.

இந்நிலையில் தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு இயக்குனர் ராகேஷ் இயக்கத்தில் ‘சாமனியன்‘ படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து மற்றொரு புதிய படத்திலும் ஹீரோவாக கமிட் ஆகியுள்ளார்.

மேலும் அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கத்திலும் ராமராஜன் ஹீரோவாக நடிக்க உள்ளார். இதில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு ‘உத்தமன்‘ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.

இதில் இவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை மீனா உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்