மீண்டும் ஹீரோயினாக களமிறங்கும் பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் 90 காலக்கட்டத்தில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரேக்கா. இவர் முதலில் ‘கடலோர கவிதைகள்‘ படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன்பின் ‘ புன்னகை மன்னன், நம்ம ஊரு நல்ல ஊரு, சொல்வதெல்லாம் உண்மை, ஆண்களை நம்பாதே, எங்க ஊரு பாட்டுக்காரன், என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, சின்ன மணிக்குயிலே, செண்பகமே செண்பகமே, ராசவே உன்னை நம்பி‘ என பல படங்களில் வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் 20 வருட இடைவெளிக்கு பின் மீண்டும் கதையின் நாயகியாக நடிக்கிறார்.

இந்த படத்தை அறிமுக இயக்குனரான மாலதி நாராயண் இயக்குகிறார். இப்படத்திற்கு ‘மிரியம்மா‘ என்ற தலைப்பை வைத்துள்ளனர்.

இதில் இவருடன் இணைந்து எழில் துரை, சினேகா குமார், அனிதா சம்பத், விஜே ஆஷிக், மாலதி நாராயண் ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்தை 72 பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குனரான மாலதி நாராயண் தயாரிக்கிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் பூஜையுடன் தொடங்கி நடந்து வருகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்