ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் திமுக எம்பி கனிமொழி பங்கேற்று நடந்து சென்றார். அவர்களுக்கு, பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை, இந்திய ஒற்றுமை பாத யாத்திரையை நடத்திடி வருகிறார். இந்த யாத்திரை தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம், மராட்டியம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை கடந்து தற்போது அரியானாவில் நடந்து வருகிறது.
இந்நிலையில், ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரையில், திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்டு நடந்து சென்றார். மேலும் அரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, மூத்த தலைவர்கள் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, குமாரி செல்ஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரை நாளை (டிச.24) டெல்லிக்குள் நுழைகிறது. ஆனால் நாட்டில் உமிக்ரானின் துணை மாறுபாடு வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளதால், இந்த பாதயாத்திரையில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுமாறும், அது முடியாவிட்டால் யாத்திரயை ரத்து செய்யும்படி ராகுல் காந்திக்கு மத்திய சுகாதார மந்திரி கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.










