உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர், அடுத்தாண்டு முடியும் என , ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 24ம் தேதி, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியது. உக்ரைனின் தலைநகர் கீவ் உள்பட பல முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை, வான்வழி தாக்குதல்கள் நடந்தன. இந்த போர் 10வது மாதத்தை கடந்த பின்னரும், இதுவரை முடிவுக்கு வரவில்லை. இந்த போரை நிறுத்த வேண்டும் என ரஷ்யாவுக்கு ஐநா சபை, உலக நாடுகள் வலியுறுத்தின. ஆனால் ரஷ்யா, அதனை நிராகரித்து தொடர்ந்து தாக்குதல்களை நடத்துகிறது.
இதற்கிடையில், ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் போரை நிறுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். இரு நாட்டு அதிபர்களிடம் பேசி, போரை நிறுத்தும்படி வலியுறுத்தினார். ஆனால்,, உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் 2023ல் முடிவுக்கு வரும் என ஐநா சபை பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, குட்டரெஸ் கூறுகையில், உக்ரைனில் எதிர்காலத்தில் போரை நிறுத்தும் முடிவுக்கான பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு இல்லை. ஏற்கனவே அதிகரித்து வரும் ராணுவ மோதல்கள் தொடரும். ஆனால் 2023ம் ஆண்டின் இறுதிக்குள் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் முடிவுக்கு கொண்டு வரப்படும் என உறுதியாக நம்புகிறேன் என்றார்.










