ரம்மி தடையை வரவேற்ற நடிகர் சரத்குமார் – கிண்டலடித்து வரும் நெட்டிசன்கள்…!

 

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சரத்குமார். இவர் சமீபத்தில் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்திருந்தார். இதனால் பல சர்ச்சைகள் சரத்குமார் மீது எழுந்தது. இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து நடிகர் சரத்குமார் பேசியதாவது, “ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை உடனடியாக அமலுக்கு வந்திருப்பதை நான் வரவேற்கிறேன்“ என கூறியுள்ளார். ஆன்லைன் ரம்மி விளம்பரத்திலும் நடித்துவிட்டு, தற்போது ஆன்லைன் ரம்மி தடையை வரவேற்கிறேன் என சரத்குமார் கூறியுள்ளதை நெட்டிசன்கள் பலர் கிண்டலடித்து வருகிறார்கள்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்