தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களின் பேவரைட் நடிகையாக சிலர் திகழ்கின்றனர். அந்த வகையில் ரசிகர்களின் பிடித்தமான கதாநாயகியாக திகழ்பவர் விசாகா சிங். இவர் மருத்துவமனையில் இருப்பதை போல் பகிர்ந்துள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மறைந்த நடிகர் மற்றும் மருத்துவருமான சேதுராமன், சந்தானம், பவர் ஸ்டார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா‘. இப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தவர் விசாகா சிங். அதனைத் தொடர்ந்து சந்தானத்தின் ‘வாலிப ராஜா‘ படத்திலும் நடித்தார்.
இந்நிலையில் சினிமாவில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் இல்லாததால் தற்போது NFT தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் பேச்சாளராகவும் பல கான்பிரன்சில் பேசி வருகிறார். இந்நிலையில் தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கும் விசாகா சிங், அது குறித்த ஒரு தகவலையும் வெளியிட்டிருக்கிறார்.
அதில், என்னால் நீண்ட நேரம் கீழே மற்றும் வெளியே இருக்க முடியாது. கால மாற்றத்தால் அடிக்கடி நடக்கும் வினோதமான சம்பவங்கள் விபத்து மற்றும் உடல்நல பிரச்சினைகளுக்கு பிறகு ஆரோக்கியமான கோடையை நோக்கி உடல்நிலை திரும்புகிறது. ஏப்ரல் மாதம் எப்போதுமே எனக்கு புத்தாண்டாகவே இருக்கிறது. ஒருவேளை இது புதிய நிதியாண்டு என்பதாலோ என்னவோ எனது பிறந்த மாதத்தின் முன் மாதம் என்பதால் கோடை நாட்களை நோக்கி ஆர்வத்துடன் முன்னேறி வருகிறேன் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.










