‘அண்ணாத்த‘ படத்தை அடுத்து நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தில் அவருடன் ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் சிவராஜ் குமார், விநாயகன். வசந்த் ரவி, யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். மேலும் தமன்னா ஹீரோயினாக ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக கூறப்படும் நிலையில், ஏப்ரல் மாதத்தோடு படப்பிடிப்பை நடத்தி முடிக்கவும் இயக்குனர் நெல்சன் திட்டமிட்டு இருக்கிறார். மேலும் ஏப்ரல் மாதத்தில் இசைவெளியீட்டு விழாவும், மற்றும் படத்தின் டீசரையும் வெளியிடுகிறார்கள். இந்த நிலையில் தற்போது ஜெயிலர் படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. மோகன்லால் நடிக்கும் படப்பிடிப்பு ஜனவரி 8-ம் தேதி நடைபெற உள்ளதாகவும் ஜெயிலர் பட வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.










