எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு படம் வருகிற 11-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் அடுத்தபடியாக அஜித் 62-வது படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 17-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் அஜித் 62-வது படத்தில் ‘விஸ்வாசம்‘ படத்தில் நடித்த நயன்தாராவே மீண்டும் நாயகியாக நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களாக இப்படத்தில் திரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வந்தன. ஆனால் இந்த படத்தில் ஹீரோயினுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லாததால் முதலில் நயன்தாரா நடிக்க மறுத்த நிலையில் திரிஷாவும் நடிக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
அதனால் தற்போது அஜித் 62-வது படத்தில் அவருடன் ஏற்கனவே விவேகம் படத்தில் நடித்த காஜல் அகர்வால் நடிப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. தற்போது காஜல் அகர்வால் கமலுடன் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார்.










