ரஜினிக்கு வில்லியாக நடிக்க ஆசைப்படும் பிரபல நடிகை

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி, அதன்பின் வில்லி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

இவர் விஜய், விஷால், சசிக்குமார் என பல முன்னணி நடிகர்களுக்கும் வில்லியாக பல படத்தில் நடித்து அசத்தியுள்ளார். இவர் தற்போது தயாள் பத்மநாபன் இயக்கத்தில் ஆரவ், சந்தோஷ் பிரதாப் நடித்துள்ள ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்‘ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் 19-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இந்நிலையில் இப்பட விழாவில் பேசிய வரலட்சுமி கூறியதாவது, “ இந்தப்படத்தில் நிச்சயம் கதை இருக்கும். இந்த கதையை கேட்கும் போதே திரில்லராக இருந்தது. எங்கள் படத்தில் நல்ல கதை இருக்கிறது.

அனைவரும் ஆதரவு தாருங்கள் என்றார். தொடர்ந்து பேசிய அவர், நான் ஒரு நடிகை. எந்த மாதிரி வேடம் கொடுத்தாலும் நடிப்பேன். ஹீரோயின், வில்லி, கேரக்டர் ரோல் என எதுவாக இருந்தாலும் என்னால் அந்த வேடத்திற்கு கண்டிப்பாக சிறப்பு சேர்க்க முடியும். வாய்ப்பு கிடைத்தால் ரஜினிக்கு வில்லியாக நடிப்பேன் “ என்று கூறியுள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்