ஹிந்தி படங்களில் நடித்து வந்த மிருணாள் தாக்கூர், ‘சீதா ராமம்‘ படத்தின் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார். சமூக வலைதளத்தில் கவர்ச்சியான படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் உலகளவில் பிரபலான கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க உள்ளார். இந்த விழாவில் பன்னாட்டு திரைப்பட கலைஞர்கள் பங்கேற்பர். அதோடு அவர்கள் அணிந்து வரும் கண்கவர் ஆடைகளும் ரசிகர்களை வெகுவாக கவரும். இந்தியாவில் இருந்து ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோனே உள்ளிட்ட ஏராளமான நடிகைகள் இதற்கு முன் பங்கேற்றுள்ளனர்.
இந்தாண்டு நடக்கும் விழாவில் மிருணாள் தாக்கூர் பங்கேற்கிறார். இது பற்றி நடிகை மிருணாள் தாக்கூர் கூறுகையில், “ மிகவும் திரில்லாக உள்ளது. என் திரைவாழ்வுக்கு கிடைத்த பெருமையாக இதை கருதுகிறேன். பல சர்வதேச திரைக்கலைஞர்களுடன் பழகும் வாய்ப்பை பெறுவேன்“ என கூறியுள்ளார்.










