தமிழில் ‘தரமணி, ராக்கி‘ ஆகிய படங்களில் நடித்த நடிகர் வசந்த் ரவி நடிப்பில் அடுத்து உருவாகியுள்ள படம் ‘அஸ்வின்ஸ்‘. இப்படத்தை தருண் தேஜா இயக்கியுள்ளார்.
இதில் விமலா ராமன், சரஸ்வதி மேனன், உதயா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தது.
இதன் படப்பிடிப்பு முடிந்த நிலையில் ரிலீஸ் வேலைகள் நடந்து வந்தன. ஏற்கனவே இந்த படம் ஜூன் 9-ம் தேதியன்று வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது ஜூன் 23-ம் தேதியன்று வெளியாகும் என்று புதிய போஸ்டர் உடன் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
மேலும், படம் தொடர்பான பணிகள் இன்னும் முடியாததால் ரிலீஸை தள்ளி வைத்ததாக கூறப்படுகிறது.










