மீண்டும் பாய்ச்சலுக்கு தயாரான பாரதிராஜா!

 

உடல்நலக் குறைவால் சிகிச்சை எடுத்துக் கொண்ட பாரதிராஜா, சில மாதங்கள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் பாய்ச்சலுக்கு தயாராகி, படப்பிடிப்பில் பங்கேற்க ஆரம்பித்துள்ளார்.

படம் இயக்குவதை கொஞ்சம் ஒத்திவைத்து விட்டு தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் இயக்குநர் பாரதிராஜா, குணச்சித்திர கதாபாத்திரங்களில் தனது நடிப்பு முத்திரையைப் பதித்து வருகிறார். அவர் தற்போது, தங்கர்பச்சான் இயக்கத்தில் ‘மேகங்கள் கலைகின்றன’என்கிற படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். தனது ஒரு நாவலை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதையை தங்கர்பச்சான் உருவாக்கியிருக்கிறார்.

 

‘மேகங்கள் கலைகின்றன’படத்தில் நடித்து வந்த நிலையில்தான் பாரதிராஜாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் இந்த படப்பிடிப்பு தாமதமானது. சிகிச்சைக்குப் பிறகு பாரதிராஜா சில மாதங்கள் ஓய்வெடுத்துக் கொண்டார். ஓய்வுக்குப் பிறகு பாரதிராஜா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. ஆகவே, பாய்ச்சலுக்கு தயாராகி மீண்டும் ‘மேகங்கள் கலைகின்றன’படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றார். பாரதிராஜாவும், யோகிபாபுவும் இடம் பெறும் காட்சியைப் படமாக்கப்பட்டது.

கிட்டதட்ட 130 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘மேகங்கள் கலைகின்றன’படத்தின் படப்பிடிப்பு மறுபடியும் தொடங்கியிருப்பதால் படத்தின் இயக்குநர் தங்கர்பச்சான் மகைழ்ச்சியடைந்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்