அஜித்தை வைத்து இயக்குநர் விக்னேஷ் இயக்கும் புதிய படத்தில் நடிகர் தனுஷ் வில்லனாக நடிக்க உள்ளார்!
இப்போது முன்னணி ஹீரோக்கள், மற்ற ஹீரோக்களின் படங்களில் வில்லனாகவோ, அல்லது சில நிமிடங்கள் வந்துபோகும்படியான கவுரவத் தோற்றத்திலோ நடிப்பதுதான் தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் டிரெண்டாக இருக்கிறது. ரஜினியின் ‘பேட்ட’படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக வந்து மிரட்டினார். மேலும் பலபடங்களில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார். கமல்ஹாசனின் ‘விக்ரம்’படத்தில் சூர்யா கிளைமாக்சில் வில்லனாக தோன்றி மிரளவைத்தார். ஷாருக்கானின் இந்திப் படத்தில் விஜய் கவுரவ தோற்றத்தில் வருகிறார்.
லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் விஜய் அடுத்து நடிக்க உள்ள படத்தில் வில்லனாக நடிக்க விஷாலை அணுகினர். அவருக்கு விருப்பம் இருந்தாலும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் நடிக்க வேண்டி இருப்பதால் இயலாது என்று மறுத்து விட்டார். அவருக்கு பதில் அர்ஜுன் வில்லனாக வருகிறார்.
இந்தநிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள புதிய படத்தில் பிரபல நடிகர் ஒருவரை வில்லனாக நடிக்க வைக்க முடிவு செய்தனர். நடிகர் தனுஷை வில்லனாக நடிக்க வைக்கலாம் என முடிவு செய்த படக்குழுவினர், நடிகர் தனுஷை அணுகி உள்ளனர். கதையைக் கேட்டு திருப்தியான நடிகர் தனுஷ், அஜித்துக்கு வில்லனாக நடிக்க முன்வந்திருக்கிறார்.










