மீண்டும் திரையில் வெளிவரும் ‘ஆளவந்தான்‘ – ரசிகர்கள் கொண்டாட்டம்

இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்டு 2001-ம் ஆண்டு வெளியான படம் ‘ஆளவந்தான்‘. இந்த படத்தில் கமல்ஹாசனுடன் ரவீனா டாண்டன், அனுஹாசன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்தபடத்தை பிரபல தமிழ் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு அவர்கள் தயாரித்திருந்தார். இந்தப்படத்தில் இடம்பெற்ற அனிமேஷன் காட்சிகள் ரசிகர்களை பிரமிக்க வைத்திருந்தாலும், அந்த காலக்கட்டத்தில் ஆளவந்தான் படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. கமல் ஹாசனின் ஆளவந்தான் படம் தான் ‘கில் பில்‘ படத்தில் இடம்பெற்ற அனிமேஷன் காட்சிகளுக்கான இன்ஸ்பிரேஷன் என்று பிரபல ஹாலிவுட் இயக்குனர் குவின்டின் டாரன்டினோ அவர்களே ஓர் நேர்காணலில் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இப்படம் குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய தயாரிப்பாளர் எஸ். தாணு “ ஆளவந்தான் படத்தின் டிஜிட்டல் வெர்ஷன் தயாராகி கொண்டிருக்கிறது“. மேலும் தற்போதைய காலகட்டத்தில் பல ரசிகர்கள் ஆளவந்தான் படத்தை ரீ- ரிலீஸ் செய்யுமாறு சமூக வலைதளங்கள் மூலமாக தொடர்ந்து தயாரிப்பாளர் எஸ். தாணு அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் ‘ஆளவந்தான்‘ படம் டிசம்பர் 8-ம் தேதி 1000 தியேட்டர்களில் ரீ ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் இந்த அறிவிப்பு வெளியானவுடன் சோஷியல் மீடியாவில் ரசிகர்களின் ‘ஆளவந்தான்‘ படத்தை கொண்டாடத் தொடங்கி விட்டனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்