இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் ‘ஜிகர்தண்டா 2‘. இதில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இதன் வெற்றியை தொடர்ந்து தற்போது 8 ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் பாகம் உருவானது. இப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியான நிலையில், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் இதுவரை ரூ.20 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ‘ஜிகர்தண்டா 2‘ படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.










