மீண்டும் இயக்குனர் பரசுராம் உடன் கைக்கோர்க்கும் விஜய் தேவரகொண்டா

தெலுங்கில் இளம் முன்னணி நடிகராக வலம் வருபவர்களில் ஒருவர் நடிகர் விஜய் தேவராகொண்டா. இவர் நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வெளியான ‘கீதா கோவிந்தம்‘ படத்தின் மூலம் இவர் பிரபலமடைந்தார். இதனால் தமிழ் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றார்.

இப்படத்தை இயக்குனர் பரசுராம் இயக்கி இருந்தார். மேலும் இதில் கதாநாயகியாக ரஷ்மிகா மந்தனா நடித்து இருந்தார். இப்படம் ரஷ்மிகா மந்தனா சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக இருந்தது. இதன் மூலம் இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் தேடி வந்தது மட்டுமில்லாமல், தமிழ், இந்தி என பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் நடிக்க உள்ளார். நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது ‘குஷி‘ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக நடிகை சமந்தா இணைந்து நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் மீண்டும் கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

காதல் கதையை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்க இதுவரை அவருடன் இணைந்து நடிக்காத நடிகை நடிக்க வேண்டும் என்று படக்குழுவினர் முடிவு செய்தனர்.

இந்நிலையில் இப்போது இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ‘சீதா ராமம்‘ படத்தின் மூலம் பிரபலமான நடிகை மிருணாள் தாகூர் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்