பொய்யான காதல் கதையை சொன்ன பிக்பாஸ் போட்டியாளர் – நடிகர் மோகன்லால் எச்சரிக்கை

பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதன் மூலம் போட்டியாளர்கள் மக்களிடையே பிரபலம் அடைகின்றனர். இதனால் இவர்களுக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வருகின்றன. இப்படிப்பட்ட இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ்,தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியை தமிழில் நடிகர் கமல்ஹாசன், தெலுங்கில் நாகஅர்ஜூன் மற்றும் மலையாளத்தில் மோகன் லால் என நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மலையாளத்தில் தற்போது பிக்பாஸ் சீசன் 5 நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஐந்தாவது சீசனையும் நடிகர் மோகன்லாலே தொடர்ந்து நடத்தி வருகிறார். இதில் நிறைய டாஸ்க்குகள் நடைபெற்று வரும் நிலையில், அதன் மூலம் போட்டியாளர்களை வெளியேற்றியும் வந்தனர்.

அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன் போட்டியாளர்களுக்கிடையே அவர்களது காதல் கதை பற்றி சொல்லுமாறு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்த டாஸ்க்கின் போது போட்டியாளர் அனியன் மிதுன் என்பவர் தான் ஒரு ஆர்மி கமாண்டோ பெண் ஒருவரை காதலித்ததாக கூறினார்.

அந்த பெண்ணிடம் தன் காதலை சொன்னதற்காக காத்திருந்த தருணத்தில் தான் அவர் துப்பக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார் என்றும், காதல் கைகூடாமல் போனாலும் கூட, தனது காதலி நாட்டுக்காக உயிரிழந்தது பெருமை என்றும் கூறினார்.

ஆனால் சனிக்கிழமை நிகழ்ச்சியில் பங்கேற்ற மோகன்லால் அனியன் மிதுன் கூறிய தகவல் பொய் என்றும், அவர் கூறியது போன்று ஒரு பெண்ணே ஆர்மி கமாண்டோவாக இல்லை என்றும் கூறினார். ஆனாலும் தான் கூறியதில் அனியன் மிதுன் விடாப்பிடியாக நின்றார். இதனைத் தொடர்ந்து கோபமான மோகன்லால், நான் கிட்டத்தட்ட 15 வருடங்களாக கௌரவ லெப்டினன்ட் கலோனலாக இருக்கிறேன்.

எனக்கு எல்லா மட்டத்திலும் ஆட்கள் இருக்கிறார்கள். நான் விசாரித்துவிட்டு தான் கூறுகிறேன். இது போன்று பொய் கதைகளை கூறுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என்று எச்சரிக்கை செய்தார். அதன் பிறகு தான் அமைதி ஆனார் அனியன் மிதுன்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்