நடிகர் திலகம் சிவாஜியின் மகனான பிரபு 250 படங்களுக்கு மேல் நாயகனாக நடித்தவர். கடந்த 21-ம் தேதி திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருப்பதாகவும், அதற்கான சிகிச்சை செய்யப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த பிரபுவுக்கு லேசர் அறுவை சிகிச்சை மூலம் கல் அடைப்பு நீக்கப்பட்டுவிட்டதாகவும் தற்போது அவர் பூரண குணமடைந்துவிட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
இதை தொடர்ந்து பிரபு நேற்று அன்னை இல்லம் திரும்பினார். அவரை ஆரத்தி எடுத்து குடும்பத்தினர் வரவேற்றனர். வீட்டில் ஒரு வாரம் வரை ஓய்வெடுத்து விட்டு பின்னர் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.










