மடோன் அஸ்வினுடன் மீண்டும் இணைய ஆசைப்படும் சிவகார்த்திகேயன்

இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாவீரன்‘. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் வெளியானது.

இதில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் நடிகை சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், ரூ.50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இந்நிலையில் ‘மாவீரன்‘ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் “ மடோன் அஸ்வின் விருப்பப்பட்டால் நான் அவருடன் மீண்டும் இணைய தயாராகவுள்ளேன்.

மாவீரன் வெற்றி எனக்கு கூடுதல் பரிசாக உள்ளது. இப்பொழுது வரை அனைவரும் என்னுடைய படங்களை பாராட்டுவார்கள், ஆனால் முதல் முறை என்னுடைய நடிப்பை பாராட்டியுள்ளனர்“ என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். மேலும் தற்போது ரசிகர்களுக்கிடையே சிவகார்த்திகேயன் மற்றும் மடோன் அஸ்வின் மீண்டும் இணைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்