பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் பிரபல நடிகை

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் ‘இது என்ன மாயம்‘ என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ‘தொடரி, ரஜினி முருகன், பாம்பு சட்டை, ரெமோ, பைரவா, சாமி-2, சண்டக்கோழி-2, தானா சேர்ந்த கூட்டம், சர்கார், அண்ணாத்த, பெண்குயின், மிஸ் இந்தியா‘ உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்களின் படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மாமன்னன்‘ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து கடந்த 2016-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தெறி‘. இதில் சமந்தா, எமி ஜாக்சன், பேசி நைனிகா, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது.

இதையடுத்து இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, ‘கீ‘ படத்தை இயக்கிய இயக்குனர் காளீஸ் இயக்கத்தில் அட்லீ தயாரிக்கும் இப்படத்தில் வருண் தவான் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாகவும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்