‘போர்த்தொழில்‘ படத்தின் அப்டேட்டை கொடுத்த நடிகர் சரத்குமார்

நடிகர் சரத்குமார் தற்போது விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் வளர்ந்து வரும் இளம் நடிகரான அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடித்துள்ளார்.

நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘போர்த்தொழில்‘ தலைப்பை கொண்ட இந்தப்படம் சைக்கோ கொலைகளை பற்றிய சஸ்பென்ஸ் திகில் படமாக தயாராகியுள்ளது. இதில் நிகிலா விமலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தை குறித்த சில தகவலை பகிர்ந்துள்ளார் நடிகர் சரத்குமார்.

அதில் அவர் கூறியதாவது, “ போர்த்தொழில் நேர்த்தியான கதை. தொடர் கொலைகள் நடக்கின்றன. அதை துப்பறிந்து கண்டுபிடிக்கும் மூத்த போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். இளம் போலீஸ் அதிகாரியான அசோக் செல்வனை எனக்கு உதவியாக நியமிக்கின்றனர்.

அவருடன் எப்போதும் எனக்கு பிணக்கு இருக்கும், வேறுபாடுகளை மறந்து இருவர் மனநிலையும் ஒன்றாகி கொலையாளியை கண்டுபிடித்தோமா? என்பது கதை. துப்பு துலக்க தடயத்தை தவிர்த்து இன்னொரு வகையில் திரைக்கதை பயணிப்பது பார்வையாளர்களுக்கு புதுசாக இருக்கும். படத்தில் ஆக்ஷன் இருக்கும். 70 சதவீதம் படப்பிடிப்பு இரவிலேயே நடந்துள்ளது“ என்று கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்