பூக்களால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பாதிப்பு…!

 

‘யசோதா‘ திரைப்படத்தை தொடர்ந்து நடிகை சமந்தா நடிப்பில் அடுத்ததாக வரும் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘சாகுந்தலம்‘. புராண கால கதையான சாகுந்தலத்தை தழுவி உருவாகியுள்ள இந்த படத்தில் சகுந்தலை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை பிரபல தெலுங்கு கமர்ஷியல் இயக்குனர் குணசேகர் இயக்கியுள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் கதாநாயகனாக நடித்துள்ளார். கடந்த சில வாரங்களாக இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் சமந்தா.

அப்படி ஒரு நிகழ்வில் சமீபத்தில் நடிகை சமந்தா பேசியதில் அவர் கூறியிருப்பது, “இந்த படத்திற்காக தினசரி எனது கைகளில் மலர்களை சுற்றியவாறு நடிக்க வேண்டி இருந்தது. படப்பிடிப்பில் நடிக்கும் போது எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் படப்பிடிப்பு முடிந்த அன்று மாலையே என்னுடையே கைகளில் அந்த பூக்கள் தடம் அச்சாக பதிந்திருக்கும். கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு எனது கைகளில் இந்த பூக்களின் அச்சுப்பதிவு இருந்தது. ஒருவேளை இது நிரந்தரமாக போகவே போகாதோ என்று கூட நான் நினைத்தேன். அதேசமயம் மேக்கப்பில் அவற்றை சரி செய்து நடித்து வந்தேன். ஆனால் நாளாக நாளாக கொஞ்சம் கொஞ்சமாக அது மறைந்து விட்டது“ என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்