தொடர்ந்து ஹீரோவாக கலக்கும் காமெடி நடிகர் சூரி…!

காமெடி நடிகரான சூரியை தனது ‘விடுதலை‘ படத்தில் கதையின் நாயகனாக நடிக்க வைத்தார் இயக்குனர் வெற்றிமாறன். அந்தப் படம் சூரிக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அதனால் தற்போது அவரை அடுத்தடுத்து பல இயக்குனர்கள் ஹீரோவாக நடிக்க வைப்பதற்கு ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள்.

அந்த வகையில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வினோத் ராஜ் இயக்கும் கொட்டு காளி மற்றும் ஏழு கடல் ஏழுமலை போன்ற படங்களில் நடிக்கிறார், அதையடுத்து விக்ரம் சுகுமாரன், துரை செந்தில்குமார் ஆகியோர் இயக்கும் படங்களிலும் கமிட் ஆகி இருக்கிறார் நடிகர் சூரி. இது தவிர மற்றொரு படத்தில் அவர் நாயகனாக நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.

அந்த வகையில் தற்போதைய நிலவரப்படி ஐந்து படங்களில் ஹீரோவாக நடித்து வரும் சூரியை தேடி மேலும் சில இயக்குனர்களுக்கும் கதை சொல்லி வருகிறார்கள். அதனால் தற்போது பிஸியான ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் சூரி.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்