படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிய பிரபல நடிகை

தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோவான சிவகார்த்திகேயன் நடித்த ‘ஹீரோ‘ படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தவர் நடிகை கல்யாணி. அதன் பின்  சிம்புக்கு ஜோடியாக ‘மாநாடு‘ படத்திலும் நடித்து இருந்தார்.

இவர் முதன் முதலில் மலையாள திரையுலகில் அறிமுகமானார். மேலும் இவர் பிரபல இயக்குனர் பிரியதர்ஷன், நடிகை லிஸி ஆகியோரின் மகள் ஆவார். இவர் தற்போது ஜோஷி இயக்கத்தில் மலையாளத்தில் தயாராகி வரும் ‘ஆண்டனி‘ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார்.

இதில் ஜோஜு ஜார்ஜ், செம்பன் வினோத் ஜொஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.  கடந்த மே மாதம் தொடங்கிய இதன் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

படத்துக்காக சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. டூப் போடாமல் கல்யாணி பிரியதர்ஷன் நடித்தார். அப்போது அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதுபற்றி வீடியோ வெளியிட்டுள்ள அவர் “ சண்டைக்காட்சிகள் உடல் பலவீனமானவர்களுக்கு அல்ல “ என்று தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்