படத்திற்காக பயிற்சி எடுக்க லண்டன் செல்லும் பிரபல நடிகர்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவரின் நடிப்பில் கடைசியாக ‘பத்து தல‘ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து தற்போது இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் போர் வீரன் வேடத்தில் நடிக்கும் சிம்பு, அதற்கு தேவையான பயிற்சிகளை பெறுவதற்காக லண்டன் செல்லப் போகிறார்.

ஒரு மாதம் அங்கு தங்கி பயிற்சி பெற்றுவிட்டு அவர் சென்னை திரும்பியதும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் தொடங்க உள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்