இயக்குனர் கிருத்திகா உதயநிதி தற்போது ஜெயம் ரவியை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் வெளியான ‘வணக்கம் சென்னை, காளி‘ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பையும், வெற்றியை பெற்றது. மேலும் இதனைத் தொடர்ந்து ‘பேப்பர் ராக்கெட்‘ என்ற ஒரு வெப் தொடரையும் இயக்கியுள்ளார்.
இது ஜீ5 சேனலில் வெளியானது. இந்நிலையில் தற்போது அவரின் மூன்றாவது படத்தை இயக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறார். இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் கதாநாயகியாக நித்யா மேனன் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதத்தில் இருந்து தொடங்க உள்ளது என கூறப்பட்டுள்ளது.










