நீண்ட இடைவெளிக்கு பிறகு 5-வது முறையாக விஜய்-உடன் இணையும் பிரபல நடிகை

தமிழில் ‘ஜோடி‘ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பின் கதாநாயகியாக மாறி கடந்த 20 வருடங்களாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘ராங்கி, பொன்னியின் செல்வன்‘ வெளியானது. இதில் பொன்னியின் செல்வன் மீண்டும் அவருக்கு மக்களிடையே பெரிய வரவேற்பை கொடுத்துள்ளது. இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தளபதி 67‘-ல் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளார். த்ரிஷா விஜய்யுடன் ஏற்கனவே “கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி“ என நான்கு படங்கள் நடித்து அது அவர்களுக்கு வெற்றி படமாக அமைந்தது.

இந்நிலையில் 14 வருடங்களுக்கு பின் மீண்டும் இருவரும் ஒன்றிணைந்து நடிக்க உள்ளனர். ‘தளபதி 67‘ என தற்காலிகமாக குறிப்பிடப்பட்டுள்ள இந்த படத்தில் “சஞ்சய் தத், பிரியா ஆனந்த், சாண்டி, மிஷ்கின், மன்சூர்ரலிகான், மாத்யு தாமஸ், கவுதம் மேனன், அர்ஜுன்“ என ஏகப்பட்ட திரைநட்சத்திரங்கள் இணைந்து நடிக்க உள்ளனர். இந்நிலையில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் நிலையில் நேற்று த்ரிஷா இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடக்கிறது. இதற்காக விஜய், த்ரிஷா, பிரியாமணி மற்றும் லோகேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் தனி விமானம் மூலம் அங்கு சென்றனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் 5-வது முறையாக இணையும் இவர்களின் நடிப்பில் வெளியாகும் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்