நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடிய பிரபல நடிகர்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் ‘செல்லமே‘ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பின் ‘சண்டக்கோழி, திமிரு, சத்யம், அவன் இவன், தாமிரபரணி‘ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பது மட்டும் இல்லாமல் பல்வேறு சமூக நல பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

இவர் தற்போது ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் ‘மார்க் ஆண்டனி‘ படத்தில் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக நடிகை ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று அனைத்து திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் நடிகர் விஷால் தனது வீட்டில் செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த நாய் விஷால் வளர்க்க தொடங்கி 14 ஆண்டுகள் ஆனது. இதை நாயின் பிறந்தநாளாக குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடினார். இந்த புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பதிவு செய்த விஷால் “ பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் மகனே“ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்