தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ‘ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக நடிகை திரிஷா நடித்துள்ளார். மேலும் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த் என பல முன்னணி திரைப்பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க கல்பாத்தி எஸ்.அகோரமின் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்காலிகமாக ‘தளபதி 68‘ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் 2024-ம் ஆண்டு வெளியாகவுள்ளது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் நடிகர், நடிகைக்கான தேர்வு நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் நடிகர் ஜெய்-யை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் ஜெய், விஜய்க்கு தம்பியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ‘பகவதி‘ படத்தின் மூலம் நடிகர் விஜய்க்கு ஜெய் தம்பியாக நடித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் 21 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் உடன் நடிகர் ஜெய் இணையவுள்ளதாக வெளியான தகவலால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.










