பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கி வரும் ‘ஜவான்‘ என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் முதன்முறையாக பாலிவுட்டில் அடி எடுத்து வைத்துள்ளார் நயன்தாரா. கடந்த வருடம் இயக்குனர் விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமணம் நடைபெற்றபோது. அதில் நேரில் வந்து கலந்து கொண்டார் ஷாருக்கான். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. அப்போதே தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார் ஷாருக்கான். இந்நிலையில் சென்னை எக்மோரில் உள்ள நயன்தாராவின் அபார்ட்மெண்டுக்கு நேரில் வருகை தந்து அவரது குழந்தைகளை பார்த்ததுடன் நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவருக்கும் மீண்டும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
நயன்தாராவின் அபார்ட்மெண்ட்டுக்கு ஷாருக்கான் வந்ததும், அவரை வரவேற்க நயன்தாரா வாசலுக்கே வந்ததுமான புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் அப்போது அவரை சுற்றி ரசிகர்கள் கூட்டம் திரண்டது, அனைவருக்கும் பறக்கும் முத்தத்தை கொடுத்துவிட்டு காரில் புறப்பட்டு சென்றுவிட்டார்.










