தெலுங்கு நடிகர் நரேஷ்க்கு மனைவியான வனிதா விஜயகுமார்

தெலுங்குத் திரையுலகத்தில் கடந்த சில வருடங்களாக பரபரப்பை ஏற்படுத்தியவர்கள் நரேஷ்-பவித்ரா. மறைந்த நடிகர் கிருஷ்ணா மனைவியின் மகனும், முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் அண்ணன் நடிகர் நரேஷ் ஆவார்.

இவர் நான்கவதாக நடிகை பவித்ராவை காதல் திருமணம் செய்து கொண்டார். நடிகை பவித்ரா கன்னடா மற்றும் தெலுங்கில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த நடிகை ஆவார். நரேஷ், பவித்ரா இருவரும் அவர்களது சொந்த வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள ‘மல்லி பெல்லி‘ என்ற படத்தில் நடித்துள்ளார்கள்.

அந்த படத்தின் புரமோஷன் என சில வீடியோக்களும் வெளிவந்தது. அது அவர்களது சொந்த வாழ்க்கையைப் போல இருந்தால் அதையும் உண்மை என்று நம்பி பலரும் செய்திகளை வெளியிட்டார்கள்.

அப்படம் நேற்று தெலுங்கில் வெளியாகியுள்ளது. படத்தைப் பார்த்தபின்பு தான் அவர்களது சொந்த கதையையே சில மாற்றங்களுடன் படமாக்கியிருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

படத்தின் இயக்குனரான எம்எஸ் ராஜு, நரேஷ் கொடுத்த பல விஷயங்களுடன் சேர்த்து படத்தை உருவாக்கியிருக்கிறாராம். நரேஷின் மூன்றாவது மனைவியாக நடிகை வனிதா விஜயகுமார் நடித்துள்ளார். படத்திற்கு விமர்சனங்கள் பாசிட்டிவாக இல்லை என்றாலும், நரேஷ்-பவித்ரா காதல் சர்ச்சையை வைத்தே படத்தை ஓட்டிவிடலாம் என நினைக்கிறார்களாம்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்