ஒரு வழியாக வெளிச்சத்திற்கு வந்த ‘துருவ நட்சத்திரம்‘

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘துருவ நட்சத்திரம்‘. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா, சிம்ரன், திவ்யதர்ஷினி என பல முன்னணி பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.

இப்படம் துவங்கும் முன்பே படக்குழு டீசர் எல்லாம் வெளியிட்டு படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்தனர். ஆனால் 5 ஆண்டுகளுக்கு மேலாக இந்தபடம் உருவாகிவந்தது. பண பிரச்சனை உள்ளிட்ட பல சிக்கலால் இந்த படம் வெளியீட்டில் தாமதமாகி வந்தது. ஒருவழியாக இந்தாண்டு படம் வெளியாக உள்ளது.

படப்பிடிப்பு முடிந்த நிலையில், சில தினங்களுக்கு முன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் கிட்டதட்ட முடிவடைந்துள்ளது. இதையடுத்து படத்தை ஜூலை 14-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்