தெலுங்கில் தனுஷ் பாடிய பாடல் வெளியீடு

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அனுஷ்கா. இவரின் நடிப்பில் வெளியான ‘பாகுபலி 1, பாகுபலி 2, பாகமதி‘ ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன.

இதனைத் தொடர்ந்து ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கில் வெளிவந்த ‘நிசப்தம், லைசன்ஸ்‘ படம் சரியான வரவேற்பை பெறவில்லை. அந்த படங்களுக்கு பின் அவர் அதிகப்  படங்களில் நடிக்கவில்லை. தெலுங்கில் மட்டும் ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி‘ என்ற படத்தில் மட்டும் நடித்துள்ளார்.

இப்படத்தை மகேஷ்பாபு இயக்கியுள்ளார். மேலும் ரதன் இசையமைக்க, நவீன் பொலிஷெட்டி கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழிலும் இப்படம் வெளியாக உள்ளது.

இந்நிலையில் தெலுங்கில் இப்படத்திற்காக நடிகர் தனுஷ் ‘ஹதவிடி‘ என்ற பாடலைப் பாடியுள்ளார். அப்பாடலை நேற்று யூ டியூப் தளத்தில் வெளியிட்டுள்ளார்கள். இதுவரை தமிழில் தனுஷ் பாடிய அனைத்து பாடலும் ஹிட் ஆகியுள்ளது. இந்நிலையில் தெலுங்கில் ஒரு இடைவெளிக்கு பிறகு மீண்டும் பாடியுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்