தமிழ் திரையுலகில் ‘கப்பல்‘ படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவார் நடிகை சோனம் பஜ்வா.
இவர் இப்படத்தினை தொடர்ந்து ‘காட்டேரி‘ படத்திலும் நடித்திருந்தார். பஞ்சாபி நடிகையான இவர் அங்கு பிரபல முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மேலும் தெலுங்கு மற்றும் இந்தியிலும் நடித்து வருகிறார். இந்தி டைரக்டர்களும், தயாரிப்பாளர்களும் ஆபாசமாக நடிக்கும்படி தொல்லை கொடுத்ததாக சோனம் பஜ்வா புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “ இந்தியில் பாலா, ஸ்ட்ரீட் டான்சர் 3டி போன்ற படங்களில் நடித்த பிறகு எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடவும் அழைத்தனர்.
ஆனால் தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் உதட்டோடு உதடு வைத்து முத்த காட்சிகளிலும், நெருக்கமான படுக்கை அறை காட்சிகளில் ஆபாசமாக நடிக்க வேண்டும் என்று என்னை துன்புறுத்தினர். இதனால் எனக்கு பயம் ஏற்பட்டது. பஞ்சாப் பட உலகில் எனக்கு நல்ல இமேஜ் இருக்கிறது.
அதை கெடுத்துக்கொள்ள மனம் இல்லாமல் இந்தி படங்களில் நடிக்க வேண்டாம் என்று நானே விலகிவிட்டேன். பஞ்சாபில் அதிக சம்பளம் பெறும் நடிகை என்ற அந்தஸ்து எனக்கு இருக்கிறது“ என்று கூறியுள்ளார் நடிகை சோனம் பஜ்வா.










