தவாங் சம்பவம்- அருணாச்சல் எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு

தவாங் எல்லை பகுதியில் அத்து மீறி சீன ராணுவத்தினர் தாக்குதல் நடத்திய சம்பவத்தால் அங்கு இந்திய ராணுவ வீரர்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினரும், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளும் அத்து மீறி இந்திய எல்லையோர கிராமங்கள் மீது தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இதில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழக்கின்றனர். இதற்கு இந்திய ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், டிசம்பர் 9 அன்று அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டரில் இந்திய மற்றும் சீனத் துருப்புக்கள் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில் மோதிக்கொண்டன, மேலும் நேருக்கு நேர் மோதியதில் இரு தரப்பிலிருந்தும் ஒரு சிலருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அருணாச்சல பிரதேசத்தில் இந்தியா-சீனா மோதலுக்குப் பிறகு சம்பாவில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் பாதுகாப்புப் படையினர் ரோந்துப் பணியை அதிகரித்துள்ளனர்.

 

 

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்