தமிழகம் முதலிடம்! – குஜராத்தை பின்னுக்குத்தள்ளிய ஜம்மு காஷ்மீர்!

சமூக முன்னேற்ற குறியீடு அறிக்கையை இந்திய பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சிலின் தலைவர் விவேக் தேவ்ராய் வெளியிட்டார். அந்த அறிக்கையின் படி மக்களின் அடிப்படை தேவைகள், நல்வாழ்வுக்கான அடித்தளங்கள், வாய்ப்புகள் ஆகிய 3 அளவீடுகளில்  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்திறனை சமூக முன்னேற்ற குறியீடு மதிப்பிடுகிறது.

தனிநபர் உரிமைகள், தனிபர் சுதந்திரம், விருப்புரிமை, சமூகத்திற்கு பங்களிக்கும் நபராக அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய தன்மை, மேம்பட்ட கல்விக்கான வாய்ப்பு ஆகியவற்றை மையமாக கொண்டு மாநிலங்கள், மாவட்டங்களின் செயல்பாடு அளவிடப்பட்டு வருகிறது.

இந்த வகையில், ஒட்டுமொத்த சமூக முன்னேற்ற குறியீட்டில் தமிழகம் 63.3 புள்ளிகளுடன் 6-வது இடத்தை பெற்றிருந்த போதிலும், மேம்பாட்டுக்கான வாய்ப்புகள் அளவீட்டில் 72 புள்ளிகளுடன் முன்னோக்கி பாய்ந்திருக்கிறது தமிழகம்!

இதில், அதிக வளர்ச்சி கொண்டதாக கருதப்படும் மாநிலங்களில் ஒன்றான , தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சொந்த மாநிலமான குஜராத்தை, பின்னுக்குத் தள்ளி ஜம்மு காஷ்மீர்  அதிகமான 60.8 புள்ளிகளை பெற்றுள்ளது. இந்த குறியீட்டு அறிகையில் கடைசி இடத்தைப் பெற்றிருப்பது ஜார்க்கண்ட்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்