தனுஷிடம் கதை சொல்ல காத்திருக்கும் ‘வீரன்‘ பட இயக்குனர்

இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் தமிழா ஆதியை வைத்து இயக்கியுள்ள படம் ‘வீரன்‘.

இப்படம் ரிலீஸ்க்காக காத்திருக்கும் நிலையில், வரும் ஜூன் 2-ம் தேதி திரையில் வெளியாகவுள்ளது. இதில் வினய் ராய், ஆதிரா ராஜ், முனீஸ்காந்த் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இதற்கு முன்பு நடிகர் ஆதி நடிப்பில் ‘மரகத நாணயம்‘ என்ற வெற்றிப் படத்தை கொடுத்திருந்தார். இந்நிலையில் அடுத்தபடியாக தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “நான் இயக்கிய ‘மரகத நாணயம்‘ படத்தை பார்த்துவிட்டு என்னை பாராட்டிய தனுஷ் தனக்கும் ஒரு கதை தயார் பண்ணுமாறு அப்போதே கூறியிருந்தார். ‘வீரன்‘ படம் திரைக்கு வந்ததும் தனுஷை சந்தித்து சில கதைகளை அவரிடத்தில் சொல்லி அதில் அவருக்கு பிடித்தமான கதையை தேர்வு செய்து அந்த படத்தை இயக்குவேன்“ என்றார்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்