ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் அடுத்த படத்தின் அப்டேட் வெளியீடு

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது ‘லால் சலாம்‘ என்னும் படத்தின் படப்பிடிப்பு வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார்.

இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் கதையின்நாயகர்களாக நடித்து வருகின்றனர். மேலும் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். கிரிக்கெட் கதை களத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது.

இதனைத்தொடர்ந்து மற்றொரு கிரிக்கெட் சம்மந்தமான படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார் என்று தகவல் பரவி வருகிறது. அந்த தகவல்கள் படி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரங் கங்குலி வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்குகிறார் என்று கூறப்படுகிறது.

கடந்த 2021-ம் ஆண்டு அவரது வாழ்க்கை பயணத்தை பயோபிக் திரைப்படமாக உருவாக்க இருப்பதாக கங்குலி தெரிவித்திருந்தார்.

ஆனால், அடுத்தக்கட்ட நிலைக்கு நகரவில்லை. இந்நிலையில், இப்போது கங்குலியின் பயோபிக் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் லவ் ரஞ்சன் தயாரிக்கிறார் எனக் கூறப்படுகிறது. கங்குலி வேடத்தில் ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்