ஜெயம் ரவியின் படங்களை வாங்க மறுக்கும் டிவி சேனல்கள்….

ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகியுள்ள ‘அகிலன்‘ திரைப்படம் தற்போது பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. இதையடுத்து அவர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படமும் வெளிவர இருக்கிறது. ஏற்கனவே இதன் முதல் பாகம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகத்திற்கும் அதிகமான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்திருக்கும் ‘சைரன்‘ படத்திற்கு ஒரு புது சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆண்டனி பாக்யராஜ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தை ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா தயாரித்துள்ளார். தற்போது படப்பிடிப்பு முடியும் நிலையில் இருக்கும் இப்படத்தை வாங்க எந்த சேனல்களும் முன்வரவில்லை.

ஜெயம் ரவியின் நடிப்பில் வெளிவந்த சில திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதனாலேயே தற்போது முன்னணி தொலைக்காட்சிகள் கூட இவர் படத்தை வாங்குவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் ஜெயம் ரவியின் மாமியார் சன் டிவியிடம் இப்படத்தை விலை பேசுவதற்கு முயற்சி செய்த நிலையில், சன் டிவி இப்படத்தை வாங்க முடியாது எனக்கூறி திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் விஜய் டிவியிடம்  விலை பேச முயன்ற போது அவர்களும் பதறிப்போய் ஏற்கனவே ‘பூமி‘ திரைப்படத்தை வாங்கி நாங்கள் பட்ட நஷ்டமே போதும், உங்கள் படம் எங்களுக்கு வேண்டாம் என்று கூறிவிட்டனர்.

இப்படி முன்னணி தொலைக்காட்சிகள் படத்தை வாங்க மறுத்ததால் யாரிடம் தள்ளிவிடலாம் என்று ஜெயம் ரவியின் மாமியார் தீவிர சிந்தனையில் இருக்கிறார். மேலும் ஓடிடியில் கூட படத்தை வாங்குவதற்கு யாரும் முன் வரவில்லை. இது ஜெயம் ரவிக்கு ஏற்பட்ட பெரும் அவமானமாக இருக்கிறது. இருப்பினும் படத்தை நல்ல விலைக்கு டீல் பேச சில மறைமுக வேலைகளும் நடந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்