‘சூர்யா 42‘ படத்தின் புதிய அப்டேட் வெளியீடு – படக்குழு அறிவிப்பு…!

 

நடிகர் சூர்யா தற்போது தனது 42-வது படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பின்னணியில் உருவாகி வரும் இப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்குகிறார். சமீப காலமாக தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இவரது கதைத்தேர்வு மிகவும் சிறப்பாக அமைந்து வருகிறது. ‘சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன், விக்ரம்‘ என அடுத்தடுத்த வெற்றிப்படங்களை  கொடுத்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘சூர்யா 42‘ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் சூர்யா 42-வது படத்தின் டைட்டில், ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு ஏப்ரல் 16-ம் தேதி காலை 9.05 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சமீப காலமாக இப்படம் பற்றிய எந்தவொரு தகவலும் வெளிவராத நிலையில் இந்த அப்டேட் சூர்யா ரசிகர்களுக்கு இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்