சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு அதிரடியான அப்டேட்டை கொடுத்த படக்குழு

இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘கங்குவா‘. இதில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் இணைந்து யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. ‘கங்குவா‘ திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில் இப்படத்தின் புதிய அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சூர்யாவின் பிறந்த நாளான 23-ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர். இந்த போஸ்டரை ரசிகர்கள் தற்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்