‘சம்யுக்தாவுடனான திருமண வாழ்க்கை ஒரு நரக வாழ்க்கை‘ – விஷ்ணுகாந்த் புலம்பல்

சீரியல் நடிகர்களான விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தாவும் திருமணம் செய்து கொண்டு 2 மாதங்கள் ஆன நிலையில் பிரிந்து விட்டனர்.

மேலும் ஒருவரையொருவர் சமூகவலைத்தளத்தில் மாறி மாறி குற்றம் சொல்லி வருகின்றனர். சம்யுக்தா, விஷ்ணுகாந்தை ஒரு காமக்கொடூரன் என்று சொல்லி வீடியோ ஒன்றை வெளியிட, கடுப்பான விஷ்ணுகாந்த் சம்யுக்தா பேசிய ஆடியோவை வெளியிட்டு அவரது தவறுகளை சமூக வலைதளங்களில் வெளிச்சம் போட்டு காட்டினார்.

இந்த ஆடியோவுக்கு எந்த பதிலும் சொல்ல முடியாத சம்யுக்தா தன்னை பாதிக்கப்பட்டவராக காண்பித்துக் கொள்ள ஆண்வர்க்கமே இப்படி தான் என கூறி வருகிறார்.

இந்த நிலையில் பிரச்சனையிலிருந்து முழுமையாக வெளிவந்துவிட்ட விஷ்ணுகாந்த் தனது இன்ஸ்டாகிராமில், சம்யுக்தாவுடனான திருமண வாழ்க்கை பொய்யான நரக வாழ்க்கை என்றும், அதிலிருந்து தன்னை இயற்கையும் இறைவனும் மீட்டுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும், இந்த கடினமான தருணத்தில் தன் மீது நம்பிக்கை வைத்து ஆதரவாக நின்ற அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி கூறி பதிவிட்டுள்ளார். அந்த பதிவிற்கு ஏராளமான பெண் ரசிகைகள் ஆதரவு தெரிவித்து வருவதுடன் விஷ்ணுகாந்த் பக்கமிருக்கும் நியாயத்தை புரிந்து கொண்டதாக அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்