கோயில் கோயிலாக தரிசித்து வரும் பிரபல நடிகை…

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை அமலா பால். இவர் தமிழில் ‘மைனா‘ படம் மூலம் அறிமுகமானார். அதன்பின் முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தவர். தற்போது அவர் தமிழில் ‘அதோ அந்த பறவை போல‘ படத்திலும், மலையாளத்தில் ‘ஆடுஜீவிதம், கிறிஸ்டோபர்‘ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

அமலா பால் சமீபத்தில் கேரளாவில் பிரபலமான திருவைராணிக்குளம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தார். ஆனால், அவரை கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை. மேலும் அங்கு மதவேறுபாடு பார்ப்பதாகவும்  அதனால் அவர் வெளியே நின்று சாமி தரிசனம் செய்ததாகவும் மிக கவலையோடு சொல்லியிருந்தார். இந்நிலையில், பழனி மலை முருகன் கோயிலுக்கு குடும்பத்தினருடன் சென்று கடவுளை வழிபாடு செய்துள்ளார். பழனியில் சமீபத்தில் கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் தனது தாய் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து வழிபட்டுள்ளார். அங்கு அவர் தரிசனம் செய்த பின் எடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த போட்டோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்