நடிகர் ராம் சரண் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘ஆர்ஆர்ஆர்‘ படம் மாபெரும் வெற்றியையும், வசூலையும் பெற்றது. மேலும் பல்வேறு விருதுகளையும் வென்றது.
இதனைத் தொடர்ந்து ராம்சரண் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்‘ படத்தில் நடித்து வருகிறார்.
இதையடுத்து புச்சி பாபு இயக்கத்தில் தனது 16-வது படத்தில் நடிக்க உள்ளார் ராம் சரண். நடிப்பில் பிஸியாக இருந்து வரும் ராம்சரண் அடுத்தபடியாக படங்களை தயாரிப்பதிலும் களமிறங்கியுள்ளார்.
அந்த வகையில் ராம் சரண் அவரது நண்பர் யு.வி.கிரியேஷன்ஸ் விக்ரம் உடன் இணைந்து தயாரிப்பு நிறுவனம் துவங்குகிறார். இந்த நிறுவனத்திற்கு வி மெகா பிச்சர்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிறுவனத்தின் முதல் படமாக நடிகர் அகில் அக்கினேனி நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.










