கன்னட மொழியில் வெளியாகும் சில படங்கள் அனைத்து மொழி ரசிகர்களையும் பெரிய அளவில் கவர்ந்து வருகிறது. அந்த வகையில் ‘கேஜிஎஃப், கேஜிஎஃப் 2, காந்தாரா‘ படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ‘காந்தாரா‘ படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததால் மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. மேலும் ‘காந்தாரா‘ படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். இந்நிலையில் கன்னட மொழியில் இன்று ‘கப்ஜா‘ என்ற படம் வெளியாகியுள்ளது. ஆர். சந்துரு இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் உபேந்திரா நடித்துள்ளார். ஸ்ரேயா இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் சிவராஜ் குமார், கிச்சா சுதீப் போன்றோர் கேமியா தோற்றத்தில் நடித்திருந்தனர்.
இப்படத்தில் ‘காந்தாரா மற்றும் கேஜிஎஃப்‘ படங்களை போல நிறைய சுவாரசியமான தகவல்கள் உள்ளது. தற்போது சிவராஜ் குமார் ரஜினியின் ‘ஜெயிலர்‘ மற்றும் தனுஷின் ‘கேப்டன் மில்லர்‘ படங்களில் நடித்து வருவதால் தமிழ் ரசிகர்கள் இவருக்காக ‘கப்ஜா படத்தை பார்த்து உள்ளனர். மேலும் கிச்சா பத்து நிமிடம் மட்டுமே படத்தில் தோன்றியது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்ததாக கூறியுள்ளனர். இப்படத்தில் ஸ்ரேயாவின் நடிப்பு அபாரமாக இருந்தது.
இப்படத்தில் மியூசிக் நன்றாக இருந்தாதகவும், சாதாரணமான கேங்ஸ்டர் கதை களத்தை கொண்டுள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. மேலும் ‘கப்ஜா‘ படத்தில் ஸ்கிரிப்ட் வேலைகள், ஒளிப்பதிவு, எடிட்டிங் போன்றவை சொதப்பி உள்ளனர். அதில் மட்டும் சற்று கவனம் செலுத்தி இருந்தால் படம் வேற லெவலில் இருந்திருக்கும். காந்தாரா அளவுக்கு இந்த படம் இல்லை என்பது தான் பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக இருந்து வருகிறது.










