இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவில் வெற்றிகரமான கமர்ஷியல் இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் காப்பியடித்து படம் எடுத்தாலும் இவரின் இயக்கத்தில் வெளியான அனைத்து படமும் சூப்பர் ஹிட் அடித்தது. மேலும் விஜய்யை வைத்து இவர் இயக்கிய ‘தெறி, மெர்சல், பிகில்‘ ஆகிய படங்கள் விஜய்யின் வாழ்வில் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்தது. இப்படி தமிழில் வெற்றிக்கொடி நாட்டிய அட்லீ, தற்போது பிரபல பாலிவுட் ஹீரோ ஷாருக்கானை வைத்து இயக்கி வருகிறார்.
இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர்கள் அனைவரும் தேடும் ஒரு இயக்குனராக லோகேஷ் கனகராஜ் இருந்து வருகிறார். இவர் இயக்கத்தில் வெளியான ‘கைதி, மாஸ்டர், விக்ரம்‘ என அனைத்து படமும் மாபெரும் வெற்றியையும், வசூலையும் தேடி தந்தது. இந்நிலையில் தற்போது இவர் விஜய்யை வைத்து ‘லியோ‘ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது. இப்படம் அக்டோபர் 19-ம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ‘லியோ‘ படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என இந்தியா முழுவதும் பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம் இந்தியிலும் விஜய்யின் மார்க்கெட் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ‘ஜவான்‘ படமும் அக்டோபரில் ரிலீஸ் ஆகும் என்கிற தகவல் ‘லியோ‘ படத்துக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘பதான்‘ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதோடு ரூ.1000 கோடிக்கு மேல் வசூலையும் குவித்தது. இதனால் ‘ஜவான்‘ படத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அட்லீ முதல் முறையாக இந்திப் படம் இயக்குகிறார் என்ற மகிழ்ச்சியில் இருந்த விஜய் ரசிகர்களுக்கு, தற்போது தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.










