தெலுங்கு நடிகரான சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகன் வருண் தேஜ். இவர் தெலுங்குத் திரையுலகத்தின் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவருக்கும் தமிழில் ‘பிரம்மன்‘ படத்தில் கதாநாயகியாக நடித்த லாவண்யா திரிபாதிக்கும் காதல் என கடந்த சில மாதங்களாகவே கிசுகிசு பரவியது.
அதை இவர்கள் தற்போது உறுதி செய்துள்ளனர். வரும் ஜுன் 9-ம் தேதி இவர்களது திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை இருவரது குடும்பத்தினரும் செய்து வருகிறார்களாம்.
அதற்கான அழைப்பிதழ்கள் நெருங்கிய உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் இதில் நடிகர் சிரஞ்சீவி, ராம் சரண், பவன் கல்யாண், அல்லு அர்ஜுன் என பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.










